தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தகுதியற்ற பள்ளி வாகனங்கள் - 37 வழக்குகள் பதிவு

தகுதியற்ற பள்ளி வாகனங்கள் - 37 வழக்குகள் பதிவு

தகுதியற்ற பள்ளி வாகனங்கள் - 37 வழக்குகள் பதிவு


UPDATED : பிப் 08, 2015 12:00 AM

ADDED : பிப் 08, 2015 12:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 08, 2015 12:00 AM ADDED : பிப் 08, 2015 12:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: பாதுகாப்பான பயணத்திற்கு தகுதியில்லாத பள்ளி, கல்லுாரி வாகனங்களை கண்டுபிடித்து, 37 வழக்குகளை, போலீசார் பதிவு செய்தனர்.

ஈரோட்டில், பல்வேறு பள்ளி மற்றும் கல்லுாரி வாகனங்கள், பாதுகாப்பற்ற முறையிலும், அரசு விதிகளை கடைபிடிக்காமலும் இயங்குவதாக, மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் சென்றது. கலெக்டர் உத்தரவை அடுத்து, ஈரோடு வட்டார போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து போலீசார், நகரின் பல பகுதிகளில், கல்வி வாகனங்களை ஆய்வு செய்தனர்.

அதிக பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வந்த 20 ஆட்டோக்கள், 7 பள்ளி வேன்கள், 10 மேக்சி கேப் வேன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்தனர். இதுபோன்ற அதிரடி ஆய்வுகளை, மாநிலம் முழுவதும் போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் நடத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us