UPDATED : பிப் 09, 2015 12:00 AM
ADDED : பிப் 09, 2015 10:52 AM
அ நிறம் | அளவு
சென்னை: ரயில்வே துறையில், சுகாதார ஆய்வாளர், மருத்துவம் சார்ந்த பணியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வில், 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
ரயில்வே துறையில், சுகாதார ஆய்வாளர், மருந்தாளுனர், மருத்துவம் சார்ந்த பணியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு, நேற்று நாடு முழுவதும் நடந்தது.
சென்னை ரயில்வே தேர்வு வாரியம் சார்பில், சென்னையில் 77 இடங்களில், காலை, 11:00 மணி முதல், 12:30 மணி வரை நடந்த தேர்வுக்கு, விண்ணப்பித்திருந்த 40 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், 20 ஆயிரம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
