தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குங்பூ திறனாய்வு தேர்வில் 60 மாணவ, மாணவியர் தேர்வு

குங்பூ திறனாய்வு தேர்வில் 60 மாணவ, மாணவியர் தேர்வு

குங்பூ திறனாய்வு தேர்வில் 60 மாணவ, மாணவியர் தேர்வு


UPDATED : பிப் 09, 2015 12:00 AM

ADDED : பிப் 09, 2015 12:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 09, 2015 12:00 AM ADDED : பிப் 09, 2015 12:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற குங்பூ திறனாய்வு தேர்வில், 60 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர்.

திருப்பூர் சைனீஷ் ஷாலின் குங்பூ இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில், குங்பூ மாணவ, மாணவியருக்கான திறனாய்வு தேர்வு, மேட்டுப்பாளையம் பஜனை மண்டபத்தில் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

தலைமை பயிற்சியாளர்கள் அப்துல் ரகு, ராகவேந்திர பாண்டியன், சுகுமாரன் முன்னிலையில் மாணவ, மாணவியர்கள், செய்முறை விளக்கப் பயிற்சி செய்தனர். மஞ்சள் பெல்ட் பிரிவில் 11 பேர், ஆரஞ்சு பெல்ட் பிரிவில் 8 பேர், பச்சை பெல்ட் பிரிவில் 6 பேர், நீலம் பெல்ட் பிரிவில் 5 பேர், பர்ப்பிள் பெல்ட் பிரிவில் 6 பேர், பிரவுன் பெல்ட் பிரிவில் 4 பேர், பிளாக் பெல்ட் பிரிவில் 20 பேர் என 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us