தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாணயவியலின் தந்தையாக தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி விளங்குகிறார்: பேராசிரியர்

நாணயவியலின் தந்தையாக தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி விளங்குகிறார்: பேராசிரியர்

நாணயவியலின் தந்தையாக தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி விளங்குகிறார்: பேராசிரியர்


UPDATED : பிப் 09, 2015 12:00 AM

ADDED : பிப் 09, 2015 01:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 09, 2015 12:00 AM ADDED : பிப் 09, 2015 01:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராசிபுரம்: ராசிபுரம், திருவள்ளுவர் அரசு கலைக் கல்லுாரியில் நடந்த பழங்கால தமிழர்களின் நாணய கண்காட்சியில், தினமலர் ஆசிரியர் கிருஷ்ண மூர்த்தியின் படைப்புகள் மற்றும் பங்களிப்புக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நாணயவியலின் தந்தையாக, கிருஷ்ணமூர்த்தி விளங்குகிறார் என, வரலாற்று பேராசிரியர் ராசசேகரத் தங்கமணி பாராட்டினார்.

ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர் கேட், திருவள்ளுவர் அரசு கலைக் கல்லுாரியின் வரலாற்றுத் துறை மற்றும் மத்திய நிறுவனத்தின் செம்மொழித் தமிழாய்வு சார்பில், பழந்தமிழ்க் கல்வெட்டு மற்றும் இலக்கியங்களில் அறிவியல் தொழில்நுட்பம் என்ற தலைப்பில், தேசிய அளவிலான கருத்தரங்கு, கல்லுாரி வளாகத்தில் நடந்தது.

நாணய கண்காட்சி

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பழங்காலத் தமிழர்களின் நாணய கண்காட்சி நடந்தது. வரலாற்றுத் துறை தலைவர் சேகரன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கணேசன் தலைமை வகித்து, கண்காட்சியை துவக்கி வைத்தார். கரூர் அரசு கலைக் கல்லுாரியின் முன்னாள் வரலாற்றுத் துறை தலைவர் ராசசேகரத் தங்கமணி, பழங்கால நாணயங்கள் குறித்து, மாணவ, மாணவியருக்கு பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார்.

அவர் பேசியதாவது: சங்ககால சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள், செம்பு, வெள்ளி, ஈயம், தங்கம் போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்டவை. கி.மு., 2 முதல், கி.பி., 2ம் நுாற்றாண்டு வரை, சங்ககால நாணயமும்; கி.பி., 6, 7ம் நுாற்றாண்டில், பல்லவர் கால நாணயமும், தமிழர்களின் வரலாற்றை எடுத்துரைப்பதில் முக்கியத்துவம் பெறுகின்றன.

நாணயவியல் தந்தை

இதில், தமிழகத்தின் நாணயவியல் தந்தை என போற்றப்படும், தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பழங்கால நாணயங்கள் சேகரிப்பில், தமிழர்களின் அடையாளத்தை உலகத்திற்கு வெளிக்காட்டியவர். இதன்மூலம், தமிழர் பண்பாடு, கலாசாரம், வணிகம், உலோக வார்ப்பு கலை, வரலாற்று பங்களிப்பு உள்ளிட்டவை அறிய முடிகிறது.

இந்த கண்காட்சியில், ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் கல்வெட்டியல் மற்றும் பண்டைய எழுத்துக்கள் பற்றிய ஆய்வுகள், நாணயவியல் நுால்கள், ஆய்வுரைகள் ஆகியன வைக்கப்பட்டுள்ளன.

இவரைப்போல், திருச்சி நாணவியல் கழகம், சேலம் பாராமஹால் நாணயவியல் கழகம் உள்ளிட்ட அமைப்புகள், நாணயங்கள் சேகரிப்பு, பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருவதால், பழங்காலத் தமிழர்களின் அடையாளங்களை அறிய முடிகிறது.

இலக்கியம், செப்பேடு, கல்வெட்டு, ஓலைச்சுவடி ஆகியவற்றைக் கொண்டு, வரலாறு எழுதப்படுவதுபோல, நாணயங்களும், தமிழர்களின் வரலாற்றோடு முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்றைய தலைமுறையினர், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நாணயவியல் துறையை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us