சிக்ரியில் ‘தன்னிறைவற்ற நீர்வள சுத்திகரிப்பு தொழில்நுட்ப கூட்டு’ கருத்தரங்கு
சிக்ரியில் ‘தன்னிறைவற்ற நீர்வள சுத்திகரிப்பு தொழில்நுட்ப கூட்டு’ கருத்தரங்கு
UPDATED : பிப் 12, 2015 12:00 AM
ADDED : பிப் 12, 2015 12:59 PM
காரைக்குடி: ‘கங்கை தூய்மை பணிக்கு, இந்தியா பிரெஞ்ச் கூட்டுநீர் சுத்திகரிப்பு தொழில் நுட்பம் பயன்படுத்த பரிந்துரைக்கப்படும்,” என காரைக்குடி சிக்ரியில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
காரைக்குடி சிக்ரி பிரான்ஸ் பாரிஸ் எஸ்ட் மார்னே லா வேலீ பல்கலை, பெங்களூருவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் இணைந்து நடத்தும், ’ தன்னிறைவற்ற நீர்வள சுத்திகரிப்பு தொழில்நுட்ப கூட்டு கருத்தரங்கு’ நேற்று தொடங்கியது.
என்.ஐ.டி., இயக்குனர் சுந்தரராஜன் பேசியதாவது:
50 ஆண்டுகளாக இந்தியா பிரான்ஸ் இடையேயான கூட்டு பயிலக திட்டம் தொடங்கப்பட்டு பல்வேறு ஆராய்ச்சிகள் நடக்கின்றன. அவற்றுள் விண்வெளி, கணிதம், வான்வெளி, அணுசக்தி ஆராய்ச்சிகள் முக்கியமானவை, என்றார்.
சிக்ரி இயக்குனர் விஜயமோகனன் பிள்ளை பேசியதாவது:
இந்தியாவில் நீர் சுத்திகரிப்பு தொழில் நுட்பத்தை, முதன் முதலில் தொடங்கியது சிக்ரிதான். ’எலக்ட்ரோ கெமிக்கல் டி புளோரிடேஷன்’,’ டி ஆர்சினேட்டர், ரிமூவல் ஆப் நைட்ரேட்’, ’ஆன் சைட் கைபோகுளோரினேட்டர்’, ’ஆன் சைட் ஓசோன் ஜெனரேட்டர்’ ஆகிய முறைகளில், நீரை சுத்திகரிக்கும் தொழில் நுட்பங்கள் சிக்ரியால் அறிமுகப்படுத்தப்பட்டு பல்வேறு தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரான்சில் உள்ள ஏ.என்.ஆர்., என்ற நிறுவனம் இந்தோ பிரெஞ்ச் கூட்டு ஆராய்ச்சிக்கு 900 மில்லியன் யூரோ ஒதுக்கியுள்ளது, என்றார்.
பெங்களூரு பிரான்ஸ் தூதரக ஒருங்கிணைப்பாளர் ஜெயேஸ் வாஹ் பேசியதாவது:
பிரான்சின் சி.என்.இ.எஸ் இஸ்ரோ மூலம் மெகாட்ரோபிக்ஸ், சரள் ஆகிய இரண்டு செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. கங்கையை சுத்தப்படுத்தும் இந்திய பிரதமரின் முயற்சிக்கு, இந்தோ பிரெஞ்ச் நீர் சுத்திகரிப்பு தொழில் நுட்பத்தை, பயன்படுத்த பரிந்துரை செய்ய உள்ளோம். இந்த கருத்தரங்கு மூலம், இந்தியா பிரான்ஸ் தொழில் நுட்பம் பகிர்ந்தளிக்கப்படும். கூட்டு ஆராய்ச்சிக்கு வழிவகுக்கப்படும், என்றார். விஞ்ஞானிகள் ஜெயசந்திரன், மீனாட்சிசுந்தரம், வாசுதேவன், பிரான்ஸ் பாரீஸ் ஈஸ்ட் மரைன் லா வேலீ பல்கலை பேராசிரியர் ஓட்ரான் பங்கேற்றனர்.
