தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/’புரிந்து படிக்க வேண்டும்’: மாணவர்களுக்கு கலெக்டர் ‘அட்வைஸ்’

’புரிந்து படிக்க வேண்டும்’: மாணவர்களுக்கு கலெக்டர் ‘அட்வைஸ்’

’புரிந்து படிக்க வேண்டும்’: மாணவர்களுக்கு கலெக்டர் ‘அட்வைஸ்’


UPDATED : பிப் 12, 2015 12:00 AM

ADDED : பிப் 12, 2015 01:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 12, 2015 12:00 AM ADDED : பிப் 12, 2015 01:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி: போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளிகளின் 110 ஆண்டு நிறைவு விழா கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் நடந்தது.

பள்ளி தலைவர் ராஜகோபால், செயலாளர் சங்கரபாண்டியன், முன்னிலை வகித்தனர். தேனி முதன்மை கல்வி அலுவலர் வாசு, உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலர் வனஜா கிரானாப்செல்வகுமாரி கலந்துகொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் சோமசுந்தரம் வரவேற்றார்.

10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற பவித்ரா, முகமது தவுபீக், இரண்டாம் இடம் பெற்ற ஷகானா இப்ரத், மூன்றாம் இடம் பெற்ற திவ்யதர்ஷனி, லாவண்யாவையும், பிளஸ் டூ தேர்வில் முதலிடம் பெற்ற ஜமீன்அப்ரோஸ், இரண்டாம் இடம் பெற்ற தனுஷா, மூன்றாம் இடம் பெற்ற விஜய குமார் ஆகியோருக்கு கலெக்டர் பரிசுகள் வழங்கினார்.

கலெக்டர் பேசுகையில், “மாணவர்கள் பாடத்தை மனப்பாடம் செய்வதை விட புரிந்து படிக்க வேண்டும். அடிப்படை கல்வி கற்பதோடு பொறியாளர், டாக்டர்களாக வேண்டும். எதிர்கால சமுதாயம் நல்ல வளர்ச்சி காண கல்வி, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்கள் கல்வி கற்க முன்வரவேண்டும்,” என்றார்.

பள்ளிகளின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் முகமது அப்துல்காதர், செல்வராஜ், கதிரேசன், ரவீந்திரன், அழகுகுமார், தங்கத்துரை, வடமலை ராஜைய பாண்டியன், ஆரம்ப பள்ளி தலைமையாசிரியை ராஜகனி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிங்கராஜ், நகராட்சி தலைவர் பழனிராஜ், கமிஷனர் ஜோதிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கலை நிகழ்ச்சிகள் நடந்தது. உதவி தலைமையாசிரியர் வெள்ளைத்துரைமணி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us