தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போதிய பஸ் வசதி இல்லாததால் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்

போதிய பஸ் வசதி இல்லாததால் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்

போதிய பஸ் வசதி இல்லாததால் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்


UPDATED : பிப் 14, 2015 12:00 AM

ADDED : பிப் 14, 2015 10:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 14, 2015 12:00 AM ADDED : பிப் 14, 2015 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவதானப்பட்டி: பெரியகுளத்தில் இருந்து மேல்மங்கலம், ஜெயமங்கலம், வைகை அணை வழியாக ஆண்டிபட்டி செல்லும் வழித்தடத்தில், காலை நேரத்தில் போதிய அளவு பஸ் வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் மாணவர்கள் படியில் தொங்கியபடி செல்கின்றனர்.

பெரியகுளம் பஸ்ஸ்டாண்டில் இருந்து வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், வைகை அணை வழியாக ஆண்டிபட்டிக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இப்பகுதி மக்கள் ஆண்டிபட்டி, தேனி, மதுரை, உசிலம்பட்டி செல்வதற்கும், உயர்நிலை, மேல்நிலை பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த வழித்தடத்தில் அதிகளவில் சென்று வருகின்றனர். உயர்சிகிச்சை பெறுவதற்கு க.விலக்கு மருத்துமனைக்கு செல்வதற்கும் இந்த வழித்தடத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்வதற்கு போதிய அளவு பஸ்வசதி இல்லை. இதனால் காலை 8 மணிக்கு மேல் செல்லும் அரசு பஸ்களில் கூட்டும் அதிகமாக காணப்படும். இதனால் உரியநேரத்தில் பள்ளிக்கு செல்லவேண்டும் என்பதற்காக மாணவர்கள் ஆபத்தை அறியாமல் படியில் தொங்கிக்கொண்டு படியில் பயணம் செய்கின்றனர்.

எனவே மாணவர்களின் நலன் கருதி பெரியகுளத்தில் இருந்து ஜெயமங்கலம், வைகை அணை வழித்தடத்தில் காலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us