"சவால்களை சமாளிக்கும் திறமையை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்"
"சவால்களை சமாளிக்கும் திறமையை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்"
UPDATED : பிப் 15, 2015 12:00 AM
ADDED : பிப் 15, 2015 11:20 AM
மதுரை: 21ம் நுாற்றாண்டு கல்வித்துறையில் பல சவால்கள் நிறைந்ததாக இருக்கும். இதை சமாளிக்கும் திறமையை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி நிறுவன இயக்குனர் லதா பிள்ளை பேசினார்.
மதுரை பாத்திமா கல்லுாரி பட்டமளிப்பு விழா நடந்தது. லதா பிள்ளை பேசியதாவது: போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் மாணவிகள் ஆராயும் திறன், பல்துறை அறிவு, தனித்திறன், தகவல் தொடர்பு திறன் போன்ற திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். 20ம் நுாற்றாண்டை விட 21ம் நுாற்றாண்டில் கல்வித்துறையில் ஏற்படப்போகும் மாற்றங்களால் சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.
எனவே, மாணவிகள் தங்களை தேடி வரும் சவால்களை சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும். குடும்பம், வேலை என இரு சூழ்நிலைகளையும் பொறுப்புடன் கையாள வேண்டும். சமூக அக்கறை மற்றும் வாழ்க்கை பண்புகளை பின்பற்றி வெற்றி பாதையில் பயணிக்க வேண்டும், என்றார்.
