தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறப்பாக நிறைவடைந்த தினமலர் கிரிக்கெட் குவிஸ் போட்டி

சிறப்பாக நிறைவடைந்த தினமலர் கிரிக்கெட் குவிஸ் போட்டி

சிறப்பாக நிறைவடைந்த தினமலர் கிரிக்கெட் குவிஸ் போட்டி


UPDATED : பிப் 15, 2015 12:00 AM

ADDED : பிப் 15, 2015 11:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 15, 2015 12:00 AM ADDED : பிப் 15, 2015 11:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தினமலர் சார்பில் உலக கோப்பை கிரிக்கெட் குவிஸ் போட்டிகள் மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நடந்தது.

காலை சரியாக 9.55மணிக்கு துவங்கிய போட்டிகள் விறுவிறுப்பான திருப்பங்களுடன் பகல் 12.36 க்கு நிறைவடைந்தன. அணிக்கு இருவர் வீதம் 500 அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்றன. 25 கேள்விகள் கேட்கப்பட்டு விடைத்தாள்கள் உடனடியாக மதிப்பீடு செய்யப்பட்டன.

இதில் அதிக மதிப்பெண் பெற்ற எட்டு ஜோடிகள் நேரடி போட்டிக்கு தகுதி பெற்றன.குவிஸ் மாஸ்டர் கோவையை சேர்ந்த பேராசிரியர் எம்.ரங்கராஜன் போட்டிகளை நடத்தினார்.

முதலிடம் பெற்ற ரமேஷ், ஸ்ரீகாந்த் ஜோடிக்கு ரூ. 10,000, கிரிக்கெட் பேட் அன்ட் பால் செட் 2, 2ம் இடம்பெற்ற பாலமுரளி, ஷியாம் சுந்தர் ஜோடிக்கு ரூ.5,0000, ஒரு கிரிக்கெட் பேட் அன்ட் பால், 3ம் இடம்பெற்ற குருபிரசன்னா, தினு அரவிந்த் ஜோடிக்கு ரூ.3,000, ஒரு கிரிக்கெட் பேட் அன்ட் பால் வழங்கப்பட்டது. பங்கேற்ற ஐந்து ஜோடிகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

சுற்றுப் போட்டிகளில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆதிக்கம் செலுத்தியது சிக்ஸ் அன்ட் அவுட் அணி தான். சாக் தி இந்தியன்ஸ், ஹிட்லர்ஸ் அணிகளுக்கு இடையே 2, 3ம் இடத்திற்கான போட்டி கடுமையாக இருந்தது. மூன்று சுற்றுகள் வரை முன்னிலையில் இருந்த சாக் தி இந்தியன்ஸ் அணி கடைசி சுற்றில் ஹிட்லர்ஸ் அணி பெற்ற கூடுதல் மதிப்பெண்ணால் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
பரிசு பெற்றவர்கள் தங்கள் சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டனர்.

ரமேஷ், ஸ்ரீகாந்த் (முதல் பரிசு): நாங்கள் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். விளையாட்டு, கிரிக்கெட் தொடர்பான குவிஸ் போட்டிகளில் பங்கேற்பது பிடிக்கும். தினமலர் நாளிதழில் பிடித்ததும் விளையாட்டு பக்கம்தான். தற்போது முதலிடம் பெற்றது சந்தோஷமாக உள்ளது.
(2013 ல் மதுரையில் தினமலர் நடத்திய கிரிக்கெட் குவிஸ் போட்டியில் ஸ்ரீகாந்த் மூன்றாமிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது).

ஷியாம்சுந்தர், பாலமுரளி (2ம் பரிசு): தினமும் தினமலர் படிக்கும் நாங்கள் போட்டி அறிவிப்பை பார்த்ததும் தயாராகி விட்டோம். இதுவரை இன்ஜினியரிங் தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளோம். விளையாட்டு போட்டிக்கான குவிஸ் போட்டியில் பங்கேற்பது இதுவே முதல்முறை. தினமலர் வெளியிட்ட கிரிக்கெட் புத்தகத்தையும் படித்து பார்த்து குவிஸ் போட்டிக்கு தயாரானோம். குரு பிரசன்னா, தினு அரவிந்த் (3ம் பரிசு): பிளஸ் 2 தேர்வுக்கான டென்ஷனில் இருந்தோம். குவிஸ் போட்டியில் பங்கேற்பது பிடிக்கும்.

1990க்கு பின் நடந்த கிரிக்கெட் விஷயங்கள் ஓரளவு தெரியும். நாங்கள் பிறப்பதற்கு முன் நடந்த கிரிக்கெட் விஷயங்களை இணையதளத்தில் தேடி படித்து தயாரானோம். தேர்வு டென்ஷனுக்கு ஒரு மாறுதல் கிடைக்கும் என நினைத்தோம். மூன்றாமிடம் கிடைத்தது அதைவிட சந்தோஷம் என்றனர்.

உலக கோப்பை யாருக்கு?

* கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகிச் செல்லும் சச்சினின் வீடியோ கிளிப்பிங்கை காண்பித்தபோது சச்சின்... என்று உணர்ச்சிவசப்பட்ட குரலில் ஆரவார கூச்சலில் அரங்கை அதிரவைத்தனர் பங்கேற்பாளர்கள்.

* கிரிக்கெட் பந்தால் ஓவியம் வரையும் விளையாட்டு வீரர் யார் என்றதற்கு, மைக்கேல் வார்ன் என சரியாக சொல்லி நடுவருக்கு ஆச்சரியம் தந்தது கிரிக்ஸ் அக்யூமென்ஸ் அணியின் சுட்டி மாணவர்கள்.

* பாகிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்குவதற்கு பரிந்துரைத்த நாடு எது? என்ற போது போட்டியாளர்களுக்கு தெரியவில்லை. தகுதிச்சுற்றில் பங்கேற்றவர்கள் இந்தியா... இந்தியா... என கோஷமிட்டனர்.

* கடைசியாக 2015 உலக கோப்பை கிரிக்கெட்டில் ஜெயிக்கப் போவது யாரு... என்று நடுவர் கேட்க... இந்தியா... இந்தியா... இந்தியா... என்று ஒருமித்த குரலில் உணர்வோடு கோஷமிட்டனர். நாட்டுப்பற்று உணர்வை ஊட்டுவதற்கு கிரிக்கெட் ஒரு முக்கிய காரணம் என்றவாறே கேள்விகளை நிறைவு செய்தார் நடுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us