மதிய உணவு சாப்பிடும் முன் மாணவர்கள் கை கழுவுகிறார்களா? - கண்காணிக்க அறிவுறுத்தல்
மதிய உணவு சாப்பிடும் முன் மாணவர்கள் கை கழுவுகிறார்களா? - கண்காணிக்க அறிவுறுத்தல்
UPDATED : பிப் 17, 2015 12:00 AM
ADDED : பிப் 17, 2015 10:49 AM
அ நிறம் | அளவு
இதுதொடர்பாக, பள்ளிகளுக்கு மத்திய மனித வளத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை
மதிய உணவு சாப்பிடும் முன், மாணவர்கள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கழுவாமல், உணவு அருந்துவதால், கைகளில் பரவியுள்ள கிருமிகளால் உடல் நலம் பாதிக்கிறது.
ஆரோக்கியத்தை பேணும் வகையில், மாணவர்களை கண்காணித்து அறிவுறுத்த வேண்டும். பெற்றோருக்கும் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சூடான உணவு வகைகளை பரிமாற வேண்டும். பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்யப்பட்ட மளிகை பொருட்களையே, உணவு தயாரிக்க பயன்படுத்த வேண்டும்.
சமையல் கூடங்களும், தூய்மையான முறையில் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
