தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்ற ‘சி-டெட்’ தேர்வு

ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்ற ‘சி-டெட்’ தேர்வு

ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்ற ‘சி-டெட்’ தேர்வு


UPDATED : பிப் 23, 2015 12:00 AM

ADDED : பிப் 23, 2015 01:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 23, 2015 12:00 AM ADDED : பிப் 23, 2015 01:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மத்திய அரசு பள்ளிகளில், ஆசிரியராக சேர நடத்தப்படும் தகுதித் தேர்வான, ’சி - டெட்’ தேர்வு நேற்று நடந்தது. தமிழகத்தில், பல ஆயிரம் ஆசிரியர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர்.

மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர்; யூனியன் பிரதேச பள்ளிகளில், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியராக பணியாற்ற, ’சி - டெட்’ எனப்படும், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்.இத்தேர்வை, பிப்ரவரி மற்றும் செப்டம்பர் என, ஆண்டுக்கு இருமுறை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ., நடத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான, முதல் தேர்வு அறிவிப்பு, டிசம்பரில் வெளியானது. நாடு முழுவதும், ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட்., படித்த லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். இதில், முதல் தாள், இடைநிலை ஆசிரியர்களுக்கும்; இரண்டாம் தாள், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத்தப்படுகிறது. இரண்டு பயிற்சிகளையும் முடித்தவர்கள், இரண்டு தாள் தேர்வுகளையும் எழுதலாம்.

நேற்று, நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் அமைக்கப்பட்ட, 988 மையங்களில் தேர்வு நடந்தது. சென்னையில், ஆறு; மதுரை, கோவை உட்பட, தமிழகத்தில், 10க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

காலை, 9:30 முதல், 12:00 மணி வரை, முதல் தாள்; பிற்பகல், 2:00 முதல், 4:30 மணி வரை, இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. சென்னையில் மட்டும், 3,000 பேர் தேர்வு எழுதினர். இத்தேர்வின் உத்தேச விடை பட்டியல், அடுத்த வாரம் வெளியாகும். இறுதி முடிவுகள், ஏப்., 1ம் தேதி வெளியிடப்படும் என, தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us