காமராஜ் பல்கலையில் உத்தரவின்றி பணியாற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை: சுற்றறிக்கை
காமராஜ் பல்கலையில் உத்தரவின்றி பணியாற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை: சுற்றறிக்கை
UPDATED : பிப் 24, 2015 12:00 AM
ADDED : பிப் 24, 2015 10:35 AM
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் உத்தரவின்றி பணியாற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து துறை அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இப்பல்கலையில் பதிவாளர் உத்தரவு இல்லாமல் பல்வேறு துறைகளில் கிளார்க் உட்பட தற்காலிக அடிப்படையில் ஊழியர்கள் சிலர் பணியாற்றுவதாக புகார் எழுந்தது. அவர்களுக்கு தனி வருகை பதிவேடும் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் தொடர்ச்சியாக அனைத்து துறை அலுவலகங்களுக்கும் பதிவாளர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் சமீபத்தில் தற்காலிக பணியாளர்கள் யாரும் பல்கலையால் நியமிக்கப்படவில்லை. பதிவாளர் உத்தரவின்றி யாரும் இங்கு பணியாற்றக்கூடாது.
அவ்வாறு பணியாற்றுவது தெரியவந்தால் சம்மந்தப்பட்ட துறை பொறுப்பாளர்கள்தான் பொறுப்பு. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
