தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விளையாட்டு வீரர்களுக்கான விடுதி திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை

விளையாட்டு வீரர்களுக்கான விடுதி திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை

விளையாட்டு வீரர்களுக்கான விடுதி திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை


UPDATED : பிப் 25, 2015 12:00 AM

ADDED : பிப் 25, 2015 12:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 25, 2015 12:00 AM ADDED : பிப் 25, 2015 12:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: விளையாட்டு வீரர்களுக்கான விடுதி திட்டத்தை, மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனினும், விளையாட்டு துறையில் உள்ள பெரும்பாலானோரை, அத்திட்டங்கள் சென்றடைவதில்லை. திறமையாளர்கள் பலர் இருப்பினும், பல மாவட்டங்களில் முறையாக பயிற்சி எடுக்க, விளையாட்டு அரங்கம் இல்லை; இதை சார்ந்துள்ள மற்ற பயனுள்ள திட்டங்களும் எட்டாக்கனியாக உள்ளது.

இவ்வரிசையில், விளையாட்டு வீரர்களுக்கான விடுதி ஏற்படுத்தும் திட்டமும் எட்டாப்பொருளாக உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டு அரங்கம் அருகே, வீரர்களுக்கு விடுதி அமைக்கப்படுகிறது. இதுவரை 14 மாவட்டங்களில், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வீராங்கனையருக்கு என ஈரோடு, சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் விடுதி உள்ளது.

தவிர, 6 முதல் 9ம் வகுப்பு வரையிலும், பிளஸ் 1 மாணவர்களுக்கும், மாவட்ட மற்றும் மாநில அளவில் பல்வேறு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு, திறன் அடிப்படையில், விளையாட்டு விடுதியில் தங்குவதற்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அவர்களுக்கு உணவு, உடை மற்றும் விடுதி வசதிக்கு, மாநில அரசு நிதி ஒதுக்குகிறது. தேர்வான மாணவர்களுக்கு, விளையாட்டு அரங்கம் அருகே உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இம்மாணவர்களுக்கு, விளையாட்டு துறையால் நியமிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் வாயிலாக, பயிற்சி வழங்கப்படுகிறது. இத்தகைய திட்டம், விளையாட்டு அரங்கம் இல்லாத காரணத்தால், திருப்பூர் மாவட்டத்தில் முடங்கி உள்ளது.

திருப்பூரில், மாநில மற்றும் தேசிய விளையாட்டுகளில் சாதிக்கும் மாணவர்கள், 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். விளையாட்டு அரங்கம் இல்லாததால், பயிற்சிக்கு கோவை அல்லது ஈரோடு செல்ல வேண்டியுள்ளது. பிற மாவட்டங்களுக்கு சென்று பயிற்சி எடுக்க நேரமின்மை, பொருளாதார வசதி இன்மையால், கிராமப்புற மாணவர்கள், பல வாய்ப்புகளை இழக்கின்றனர்.

விளையாட்டு வீரர்களுக்கான விடுதி அமைக்கும் திட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, விளையாட்டு வீரர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us