தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘பெண் கல்விக்கு உதவுங்கள்’; ஸ்டாலினுக்கு திடீர் கரிசனம்

‘பெண் கல்விக்கு உதவுங்கள்’; ஸ்டாலினுக்கு திடீர் கரிசனம்

‘பெண் கல்விக்கு உதவுங்கள்’; ஸ்டாலினுக்கு திடீர் கரிசனம்


UPDATED : பிப் 26, 2015 12:00 AM

ADDED : பிப் 26, 2015 11:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 26, 2015 12:00 AM ADDED : பிப் 26, 2015 11:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

’தன் பிறந்த நாள் விழாவில், ஃப்ளக்ஸ் பேனர், போஸ்டர் வைத்து வீண் செலவு செய்வதை தவிர்த்து, பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும்’ என, சமூக வலைத்தளங்களில், தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்களுக்கு, ஸ்டாலின் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், கட்சியினருக்கு அனுப்பியுள்ள தகவல் விபரம்:

நீங்கள், என் மீது வைத்திருக்கின்ற அளப்பரிய அன்பை நன்கறிவேன். அதுதான், பொது வாழ்வில் என்னை ஊக்குவிக்கின்ற உந்து சக்தியாக இருந்து வருகிறது. இத்தருணத்தில், உங்கள் முன் ஓர் அன்பான வேண்டுகோளை வைக்கிறேன்.

மார்ச் 1ம் தேதி, என் பிறந்த நாளை முன்னிட்டு, வாழ்த்து சுவரொட்டி, விளம்பர பலகை ஆகியவற்றிற்கு பணத்தை வீண் செய்யாமல், பெண் குழந்தைகளின் கல்விக்கு, அந்தப் பணத்தை நீங்கள் செலவு செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம். அதுவே, நீங்கள் எனக்கு வழங்குகின்ற உள்ளார்ந்த பிறந்த நாள் வாழ்த்தாக அமையும், என கூறியுள்ளார்.

பெண் கல்வி மீது, ஸ்டாலினுக்கு திடீரென கரிசனம் ஏற்பட்டுள்ளது, கட்சி நிர்வாகிகள் இடையே, வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us