sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர்கல்வி அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக புகார்

உயர்கல்வி அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக புகார்

உயர்கல்வி அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக புகார்


UPDATED : பிப் 27, 2015 12:00 AM

ADDED : பிப் 27, 2015 12:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 27, 2015 12:00 AM ADDED : பிப் 27, 2015 12:44 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை: பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மற்றும் வினாத்தாள் நோடல் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புகள் குறித்து உயர்கல்வி அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

மார்ச் 5ல் பிளஸ் 2 தேர்வு துவங்கவுள்ளது. தேர்வுகள் நடத்துவது தொடர்பாக சில நாட்களுக்கு முன் தேர்வுத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மேலும் தேர்வு மையங்கள், விடைத்தாள் மையங்கள், வினாத்தாள் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் நெல்லை மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், விடைத்தாள்கள் எரிந்து சாம்பலாகின. இச்சம்பவத்தை அடுத்து விடைத்தாள் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளித்து அதை உறுதிசெய்ய, இணை இயக்குனர்களையும், கண்காணிப்பு பணி மேற்கொள்ள, துணை செயலர் சுபோத் குமாரையும் நியமித்து கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, ஏற்கெனவே இருந்த பாதுகாப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டு, கம்பி ஜன்னல் வசதியுள்ள மையங்களில் அதை சிமென்ட் மற்றும் செங்கலால் அடைக்கவும், மர பீரோக்கள் அல்லது தரையில் வைக்கப்பட்ட விடைத்தாள்களை ஸ்டீல் பீரோக்களில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: தேர்வுத்துறை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில் மையங்களில் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் செயலாளர் உத்தரவு என்ற பெயரில் முந்தைய பாதுகாப்பு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என இணை இயக்குனர்கள் கடைசி நேரத்தில் வலியுறுத்துவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக உதவிபெறும் பள்ளிகள், வகுப்பறைகளைத்தான் மையங்களாக பயன்படுத்த, தேர்வு காலத்தில் வழங்குகின்றன. அவர்கள் ஜன்னல்களை அடைக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us