அறிவியல் கண்காட்சி மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
அறிவியல் கண்காட்சி மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
UPDATED : ஆக 20, 2015 12:00 AM
ADDED : ஆக 20, 2015 09:04 AM
சிவகங்கை:
அறிவியல் தொடர்பான
படிப்பிற்கு எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால்,இளம் மாணவர்களுக்கு
கண்காட்சி மூலம் விழிப்புணர்வு தேவை என, சிக்ரிபெண் விஞ்ஞானி ஷீலா பெர்க்மான்ஸ் கூறினார்.
சிவகங்கை ஆக்ஸ்வர்ட் மெட்ரிக்., பள்ளியில் பூவந்தி மதுரை சிவகாசி நாடார் பயானியர் மீனாட்சி
கலை, அறிவியல் கல்லூரி
பேராசிரியை ரமா பொற்கொடி தலைமையில் அக்கல்லூரி மாணவிகள் 7 துறை தொடர்பான அறிவியல் மாதிரி படைப்புகளை கண்காட்சிக்கு
வைத்திருந்தனர். ஆஸ்வர்ட், மதுரை விர கனூர்
காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் பார்த்தனர்.
கம்யூனிகேஷன் வளர்ச்சி,ஷேக்ஸ்பியரின் தியேட்டர்,கழிவுகளை அகற்றல் போன்ற முக்கிய படைப்புகள் இடம் பெற்றிருந்தன.
படை ப்புகளை காரைக்குடி சிக்ரிபயோ எலக்ட்ரோ கெமிக்கல்துறை முதன்மை விஞ்ஞானி ஷீலா
பெர்க்மான்ஸ்,ஆக்ஸ்வர்ட் பள்ளி தாளாளர்
சியாமளா பார்வையிட்டு, படைப்புகள் பற்றி
கேட்டறிந்தனர்.
தற்போது மருத்துவம், பொறியியல் துறை படிப்பிற்கு நாட்டம் அதிகரிக்கிறது. அறிவியல் தொடர்பான படிப்பிற்கு நல்ல எதிர்காலம், வேலை வாய்ப்பு உண்டு. இது போன்ற அறிவியல் கண்காட்சி மூலம் இளம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் சிறு,சிறு கருத்தரங்கம், நடப்பு கண்டுபிடிப்பு, அறிவியல் கண்காட்சிகளை நடத்த வேண்டும்.
அறிவியல் தொடர்பான அசெய்ன்ட்மென்ட்களை மாணவர்களுக்கு வீட்டு
பாடமாக கொடுக்க வேண்டும். அறிவியல் குறித்த கட்டுரை எழுத செய்ய வேண்டும். கல்லூரி, பிளஸ் 2 அளவிலான மாணவ, மாணவிகளின் அறிவியல்
படைப்பு இளையவர்களை உற்சாகப்படுத்தும். அறிவியலை படிக்க தூண்டும். இவ்வாறு
கூறினார்.
