தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு துணை தேர்வுக்கு ஆக.26க்குள் விண்ணப்பிக்கலாம்

10ம் வகுப்பு துணை தேர்வுக்கு ஆக.26க்குள் விண்ணப்பிக்கலாம்

10ம் வகுப்பு துணை தேர்வுக்கு ஆக.26க்குள் விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஆக 20, 2015 12:00 AM

ADDED : ஆக 20, 2015 09:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2015 12:00 AM ADDED : ஆக 20, 2015 09:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி
: செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடைபெற உள்ள 10ம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என முதன்மைக் கல்வி அலுவலர் ராமலிங்கம் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடைபெற உள்ள 10ம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்கள் மற்றும் தோல்வியுற்ற தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் பதிவு செய்வது, கடந்த 17ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. வரும் 26ம் தேதி வரை அலுவலக நாட்களில், அரசு தேர்வுகள் சேவை மையங்களில் ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

முத்தியால்பேட்டை, சாலைத்தெருவில் உள்ள அரவிந்தர் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில், ஆண் விண்ணப்பதாரர்களும், மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெண் விண்ணப்பத்தாரரும் விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

தேர்வுக்கட்டணம்:

தேர்வுக்கட்டணமாக ரூ. 125 மற்றும் பதிவுக்கட்டணம் ரூ.50, சேர்த்து ரூ.175 அரசு தேர்வுகள் சேவை மையங்களில் பணமாக செலுத்த வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பம் பதிவு செய்த பிறகு, தனித் தேர்வர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். பின்னர், அரசு தேர்வுத்துறை அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us