தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் ஆதார் முகாம்; ஒப்புகை சீட்டுகளை சேகரிக்க உத்தரவு

பள்ளிகளில் ஆதார் முகாம்; ஒப்புகை சீட்டுகளை சேகரிக்க உத்தரவு

பள்ளிகளில் ஆதார் முகாம்; ஒப்புகை சீட்டுகளை சேகரிக்க உத்தரவு


UPDATED : ஆக 20, 2015 12:00 AM

ADDED : ஆக 20, 2015 09:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2015 12:00 AM ADDED : ஆக 20, 2015 09:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்
: பள்ளிகளில் விரைவில் ஆதார் சிறப்பு முகாம் நடக்க உள்ளதால், அதற்கான மாணவர் ஒப்புகை சீட்டுகளை தயார் நிலையில் வைத்திருக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட நலத்துறை சார்பில், பல்வேறு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், தேசிய திறனாய்வு தேர்வு, தேசிய வருவாய்வழி திறன் தேர்வு உள்ளிட்டவை மூலமாகவும், கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

உதவித்தொகை பெறும் மாணவர்களின் வங்கிக்கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணையும் இணைக்க, இந்த கல்வியாண்டு முதல் அறிவுறுத்தப்படுகிறது. இதில், ஆதார் எண் பெறாத மாணவ, மாணவியருக்கு, பள்ளிகளிலேயே சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, ஆதார் எண் வழங்கப்படும்என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், அனைத்து வகை பள்ளிகளுக்கும், தொடக்கக்கல்வித்துறை சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு வழங்கப்பட்ட, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒப்புகை சீட்டின் நகலை சேகரித்து, வரும், 21ம் தேதிக்குள் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில், பள்ளிகளில் ஆதார் எண் வழங்கும் சிறப்பு முகாம்கள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us