UPDATED : ஆக 22, 2015 12:00 AM
ADDED : ஆக 22, 2015 10:15 AM
மதுவிலக்கு ஆர்ப்பாட்டம்,போராட்டங்களில் பள்ளி மாணவர்கள் ஈடுபடுவதை ஆசிரியர்கள் தடுக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் வலியுறுத்தி உள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குனரகம் சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்களுக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில், மதுவிலக்கு அமல் கோரி பல்வேறு அமைப்பினர் நடத்தும் போராட்டங்களில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது.
கல்வி நலனில் அக்கறை காட்ட வேண்டும். இது குறித்து தலைமை ஆசிரியர்கள், காலையில் நடக்கும் இறைவணக்க கூட்டத்திலும், வகுப்பாசிரியர்கள் பாட வகுப்பிலும் மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.
இது பற்றிய கடித
நகல்களை தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி, ஒப்புகை பெறவேண்டும். ஒப்புகை நகலை சி.இ. ஒ.,க்கள் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்திற்கு
அனுப்பி வைக்க வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
