தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி ஊக்கத்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கல்வி ஊக்கத்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கல்வி ஊக்கத்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : ஆக 25, 2015 12:00 AM

ADDED : ஆக 25, 2015 10:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2015 12:00 AM ADDED : ஆக 25, 2015 10:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி
: போயர் சமூக மாணவ, மாணவியரிடமிருந்து கல்வி ஊக்கத்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மாநில செயலாளர் காஞ்சி அழகேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு போயர் முன்னேற்ற நல அறக்கட்டளையின் சார்பாக, 2015ம் ஆண்டு வழங்கப்படும், கல்வியில் சிறந்த மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்குவதற்குரிய விண்ணப்பங்கள் மாணவ, மாணவியரிடமிருந்து வரவேற்கப்படுகிறது. 

போயர் சமுதாய மாணவர்கள், 2015 பொதுத் தேர்வில் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர், 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள், தங்களின் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதல் நகல் மற்றும் ஜாதி சான்று நகலையும் இணைத்து விண்ணப்பிக்கலாம்.

மேலும், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.இ., பி.எஸ்சி., (அக்ரி), பி.எல்., பி.வி.எஸ்சி., பி.எச்.டி., போன்ற உயர்கல்வி பயில்பவர்கள் படிப்பு சான்று நகல் மற்றும் ஜாதி சான்று நகலுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் மாநில மற்றும் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களும், கல்வி ஊக்கத்தொகை பெற விண்ணப்பம் அனுப்பலாம். விண்ணப்பங்கள் வரும், 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 

எனவே, போயர் சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் உடனடியாக விண்ணப்பங்களை தலைவர், தமிழ்நாடு போயர் முன்னேற்ற நல அறக்கட்டளை, ஸ்ரீ ஜஸ்மாதேவி மகால், செட்டிப்பாளையம் ரோடு, ஈச்சானாரி அஞ்சல், கோவை- 641021 என்ற முகவரியில் சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us