UPDATED : ஆக 26, 2015 12:00 AM
ADDED : ஆக 26, 2015 11:09 AM
சேலம்
: மேலாண் கல்வி குறித்த விழிப்புணர்வு
பயிற்சி முகாம், பெரியார் பல்கலையில், நேற்று, நடந்தது. பெரியார் பல்கலையில், மேலாண் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு
முதலீடுகள் பற்றிய விழிப்புணர்வும் அதன் வாய்ப்பு குறித்த பயிற்சி நடந்தது.
மேலாண் கல்வி நிறுவன இணை பேராசிரியர் பழனிவேலு வரவேற்றார். பேராசிரியர் மற்றும் இயக்குனர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அதில், துணை வேந்தர் சுவாமிநாதன், பயிற்சியை துவக்கி வைத்து, இந்திய பங்குசந்தை, உலக பொருளாதாரம், இந்திய வர்த்தகம், முதலீடு உள்ளிட்டவை குறித்து பேசினார்.
இதில், தேசிய பங்குசந்தை துணை மேலாளர் செந்தில்முருகன்,
மேலாண் கல்வி நிறுவன இணை பேராசிரியர் யோகநாதன்,
தமிழக மாநில பிரிவின் தலைவர் வெங்கடேசன்,
மேலாண் துறை உதவிப்பேராசிரியர் சாரதி, முனைவர் செந்தில்வேல்முருகன், சுப்பிரமணியபாரதி, பாலமுருகன் உள்ளிபட பலர் பங்கேற்றனர்.
