UPDATED : ஆக 28, 2015 12:00 AM
ADDED : ஆக 28, 2015 10:30 AM
ஜெர்மனிக்கு, அரசு முறை பயணம் சென்ற வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மர் மற்றும் கல்வி அமைச்சர் ஜோஹன்னா வாங்கா ஆகியோருடன், பேச்சு நடத்தினார்.
அப்போது, இந்தியாவின்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்,
கூடுதல் மொழியாக, ஜெர்மன் மொழி தொடர்ந்து
பயிற்றுவிக்கப்படும் என, சுஷ்மா உறுதி அளித்தார். அதுபோல், சமஸ்கிருதம் உள்ளிட்ட இந்திய மொழிகளை, ஜெர்மனி கல்வி
மையங்கள் பயிற்றுவிக்கும் என்று,
ஜோஹன்னா வாங்கா கூறினார்.
இதுகுறித்த
அதிகாரப்பூர்வ அறிவிப்பை, வரும் அக்டோபரில், இந்தியா வரும், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் வெளியிடுவார் என, வெளிஉறவு
அமைச்சக செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.
அவர் மேலும்
கூறியதாவது
ஜோஹன்னா வாங்கா உடனான சந்திப்பின் போது, ஜெர்மனியில் கல்வி பயிலும் இந்திய
மாணவர்களுக்கு, குடியிருப்பு அந்தஸ்து பெறுவதிலும், விசாவை புதுப்பிப்பதிலும் உள்ள பல்வேறு
சிரமங்களை, சுஷ்மா எடுத்துக் கூறினார்; அதற்கு, விரைவில் உரிய தீர்வு காணப்படும் என்று, வாங்கா உறுதி
அளித்தார். இவ்வாறு, அவர் கூறினார்.
- ஜெர்மனியில், 10 ஆயிரம் இந்திய மாணவர்கள் உயர்கல்வி கற்கின்றனர். ஜெர்மனியைச் சேர்ந்த, 800 மாணவர்கள், இந்தியாவில் உயர்கல்வி பயில்கின்றனர்.
- இந்தியா - ஜெர்மனி அரசுகள், பரஸ்பர கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்போடு, மாணவர்கள் பரிமாற்ற திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளன.
- மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறைகளில், முன்னோடி கல்வித் திட்டத் திற்கான, சர்வதேச மையத்தை, இந்தியாவில் அமைக்க, ஜெர்மனி திட்டமிட்டு உள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஜெர்மன் மொழி பயிற்று விக்கும் திட்டத்திற்கு பதிலாக, சமஸ்கிருதத்தை கொண்டு வர, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், கடந்த நவம்பரில் முடிவு செய்தது.
இதற்கு, ஜெர்மனி கடும்
எதிர்ப்பு தெரிவித்தது; இதை, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், பிரிஸ்பேன், ஜி-20 உச்சி
மாநாட்டில், பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அப்போது, இப்பிரச்னைக்கு
விரைவில் சுமுக தீர்வு காணப்படும் என, மோடி உறுதி அளித்திருந்தார்.
