தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டதாரி ஆசிரியர்கள் 1086 பேர் இடமாற்றம்

பட்டதாரி ஆசிரியர்கள் 1086 பேர் இடமாற்றம்

பட்டதாரி ஆசிரியர்கள் 1086 பேர் இடமாற்றம்


UPDATED : ஆக 29, 2015 12:00 AM

ADDED : ஆக 29, 2015 10:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2015 12:00 AM ADDED : ஆக 29, 2015 10:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாநிலம் முழுவதும் 1086 பட்டதாரி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, 145 துவக்கப்பள்ளி ஆசிரியர் களுக்கு, பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 252 துவக்கப் பள்ளிகள் உள்ளன. இதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டய ஆசிரியர்கள் வேலை செய்கின்றனர். துவக்க பள்ளிகளில் ஐந்தாண்டு காலம் பணிபுரிந்து ஏதேனும் பட்டப் படிப்புடன் பி.எட்.,கல்வி தகுதியுடைய அரசு துவக்க பள்ளி ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி அளிக்கப்படுகிறது. சில மாதங்களாக துவக்க பள்ளிகளில் பணியாற்றிய துவக்க பள்ளி ஆசிரியர்களின் மூப்பு பட்டியல் எடுத்து, தகுதியுடைய 145 துவக்க பள்ளி ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழில்-22 ஆசிரியர்கள், ஆங்கிலம்-28, கணிதம்-19, இயல் அறிவியல் -9, உயிர் அறிவியல்-12, சமூக அறிவியல்-40 துவக்க பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மாகியில்-1, ஏனாமில்-5 துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் இனி ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கலாம்.

இட மாற்றம்: பதவி உயர்வை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பட்டதாரி ஆசிரியர்கள் அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி பிராந்தியத்தில் 933 பட்டதாரி ஆசிரியர்கள், காரைக்கால் பிராந்தியத்தில் 153 பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட 1086 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு 23 ஆசிரியர்களும், புதுச்சேரியில் இருந்து மாகிக்குஒரு ஆசிரியரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க இந்த அதிரடியை கல்வித் துறை எடுத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us