UPDATED : செப் 02, 2015 12:00 AM
ADDED : செப் 02, 2015 10:48 AM
சென்னை
: சென்னை அரசு மருத்துவ கல்லுாரி
மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லுாரியில், இந்திய மருத்துவ கவுன்சிலான- எம்.சி.ஐ., குழு ஆய்வு நடத்தியது.
சென்னை அரசு
மருத்துவ கல்லுாரியில், 265; ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியில்,
200 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு முன், தலா, 50 இடங்கள் உயர்த்தப்பட்டன. அதற்கேற்ப
போதிய வசதிகள் உள்ளதா என, எம்.சி.ஐ., குழு நேற்று ஆய்வு நடத்தியது. இரண்டு கல்லுாரிகளிலும், தலா மூன்று பேர் குழு, மருத்துவ
கல்லுாரி, மருத்துவமனை மற்றும் விடுதிகளில் ஆய்வு
நடத்தியது.
ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதா எனவும், ஆய்வுகள் நடந்தன. தற்போது, மாணவர் சேர்க்கை முடிந்துள்ள நிலையில், இந்த குழு அறிக்கையின் படியே, அடுத்தடுத்த ஆண்டுகளிலும், கூடுதல் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்கும்.
