தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாடத்திட்டத்தில் மாற்றம்; சிபிஎஸ்இ முடிவு

பாடத்திட்டத்தில் மாற்றம்; சிபிஎஸ்இ முடிவு

பாடத்திட்டத்தில் மாற்றம்; சிபிஎஸ்இ முடிவு


UPDATED : செப் 02, 2015 12:00 AM

ADDED : செப் 03, 2015 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2015 12:00 AM ADDED : செப் 03, 2015 10:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதற்கு பிள்ளையார் சுழி போட்டது குஜராத் மாநிலம் தான். அங்கு தான் இம்முறை முதலில் கொண்டு வரப்பட்டது. சமீபத்தில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அம்மாநில அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. 

அதில், மூன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விலங்குகளிடம் கருணை செலுத்த வேண்டியது பற்றி வலியுறுத்த வேண்டும் எனவும், இதற்காக பிராணிகள் நலச்சங்கம் வகுத்து கொடுத்த பாடங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதையே நாடு முழுவதும் உள்ள தங்கள் பள்ளிகளிலும் கொண்டு வர சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. சண்டிகர், டில்லி, கோவா, கேரளா, அரியாணா, மத்திய பிரதேஷ் ஆகிய மாநிலங்களும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளன.

பிராணிகள் நலச்சங்க கல்வி ஒருங்கிணைப்பாளர் பூஜா மகாஜன் கூறும்போது, விலங்குகளிடம் அன்பு செலுத்த வேண்டும் என்று சொல்லித் தந்தாலே மற்றவர்களிடமும் குழந்தைகள் அன்பு செலுத்த துவங்கிவிடுவர். வன்முறை கலாசாரம் ஒழியும் என்றார்.

இப்பாடத்திட்டத்தில் விலங்குகளின் முக்கியத்துவம், அன்பு செலுத்த வேண்டியதன் அவசியம்,வீடியோ, புகைப்படங்கள், விலங்குகள் பற்றிய கதைகள் போன்றவை இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே பிராணிகள் நலச்சங்கம் தயாரித்துக்கொடுத்த பாடக் குறிப்புகள், நாடு முழுவதும் 25 ஆயிரம் பள்ளிகளில் பயன்படுத்தப்படுகின்றன. 50 லட்சம் குழந்தைகளை இவை சென்றடைகின்றன

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us