ஆங்கில உச்சரிப்பு இறுதிப்போட்டி; தமிழக இரட்டை குழந்தைகள் பங்கேற்பு
ஆங்கில உச்சரிப்பு இறுதிப்போட்டி; தமிழக இரட்டை குழந்தைகள் பங்கேற்பு
UPDATED : செப் 03, 2015 12:00 AM
ADDED : செப் 03, 2015 11:08 AM
ஆஸ்திரேலியாவில் பிரசித்தி பெற்ற, சேனல் 10 டிவியின் ஆங்கில உச்சரிப்பு இறுதிப் போட்டிக்கு, தமிழகத்தை சேர்ந்த இரட்டைகுழந்தைகள் தேர்வு பெற்றுஉள்ளனர். இன்னும், இரு வாரங்களில் இறுதி போட்டி நடக்க உள்ளது. ஆஸ்திரேலியாவின் சேனல் 10 டிவி சேனலில், ஆண்டுதோறும், ஸ்பெல் பீ என்ற ஆங்கில உச்சரிப்பு போட்டி நடக்கும்.
14 வயது வரையிலான குழந்தைகள் பங்கேற்கலாம். போட்டி நடுவர்கள் ஆங்கில வார்த்தைகளை கூறி, அதற்குரிய சரியான உச்சரிப்பு மற்றும் எழுத்துகளை கேட்பர். இதில், ஆங்கிலத்திலுள்ள பல மொழிக்கலப்பு வார்த்தைகளும் இடம்பெறும்.
இந்த ஆண்டு போட்டியில், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாண்டியன் அண்ணாமலை என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் பிரியா பாண்டியன் என்ற பிசியோதெரபிஸ்ட் தம்பதியின், இரட்டை குழந்தைகள், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் அண்ணாமலை - பிரியா தம்பதி, 2007ல், ஆஸ்திரேலியா சென்றனர்.
இரட்டையரில்,
பெண் குழந்தை ஹர்பிதா; ஆண் குழந்தை ஹர்பித்; இருவருக்கும், ஒன்பது வயதாகிறது. ஆஸி., பள்ளியில்
மூன்றாம் வகுப்பு படிக்கின்றனர். இருவரும், ஆங்கில வார்த்தை உச்சரிப்பில் போட்டி போடுகின்றனர். சேனல்-10
டிவி சேனல், இறுதிப்போட்டியில், இரட்டையரை நேருக்கு நேர் போட்டியிட
செய்ய தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து,
பாண்டியன் அண்ணாமலை தன், &'பேஸ்புக்&' பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இருவருக்கும்,
50 ஆயிரம் ஆங்கில வார்த்தைகள் தெரியும். நாங்கள்
சிறப்பு பயிற்சி எதுவும் அளிக்கவில்லை. தினமும், இரவு உணவு முடிந்ததும், ஆங்கில
வார்த்தைகளை சொல்லி விளையாடுவோம். அதில்தான் இருவரும் வார்த்தைகளை
கற்றுக்கொண்டனர்.நாங்கள் அடிக்கடி வெளியில் செல்லும் பழக்கம் இல்லாதவர்கள்.
இருந்தாலும், குழந்தைகளின் ஆர்வம் அதிகமாக
இருந்ததால், வீட்டிலேயே ஆங்கில வார்த்தைகளை சொல்லி,
அதை உச்சரித்து, பொருள் தெரிந்து விளையாடியதால், இந்த அளவுக்கு குழந்தைகளால், தன்னம்பிக்கையுடன்
போட்டி போட முடிந்துள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மாணவி ஹர்பிதா
கூறும்போது, தினமும் புதிதாக, 30 வார்த்தைகள் கற்றுக்கொள்வோம். புத்தகங்கள், பாடம், வீட்டில் பெற்றோர் பேசுவதில் இருந்து,
வார்த்தைகளை தெரிந்து கொள்வோம், என்றார். ஹர்பிதாவுக்கு பிடித்த வார்த்தை, cafune-கேப்யூன். விருப்பமான உறவுகளின் தலைமுடியை,
விரல்களால் ஸ்பரிசம் செய்வதே இதன்
பொருள். இருவரும் எதிர்காலத்தில் மருத்துவராக விரும்புகின்றனர். ஹர்பிதா, நெஞ்சக நிபுணராகவும், ஹர்பித் நரம்பியல் நிபுணராகவும்
உயர்வதே லட்சியமென தெரிவித்துள்ளனர்.
