UPDATED : செப் 04, 2015 12:00 AM
ADDED : செப் 04, 2015 10:29 AM
அ நிறம் | அளவு
9 வகுப்பு படித்த இம்மாணவி ஸ்ரீவில்லிபுத்துார் பல்கலையில் எம்.டெக்.,முதலாம் ஆண்டில் சேர அனுமதியளிக்கப்பட்டுள்ளார். சிறுவயதில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை இன்று டில்லியில் இருந்தபடி பிரதமர் மோடி வீடியோ நேரலை மூலம் பேசி பாராட்டுகிறார். ஆசிரியர் தினத்தையொட்டி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை 11 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சி பகல் 1 மணிக்கு நிறைவு பெறும். இந்நிகழ்ச்சியை துார்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ நேரடியாக ஒளிபரப்புகின்றன.
பிரதமருடனான நேரலை முடியும் வரை பத்திரிகை, டிவிக்கு பேட்டி கொடுக்க கூடாது என விசாலினிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
