தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு: 165 பேர் இடமாற்றம்

ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு: 165 பேர் இடமாற்றம்

ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு: 165 பேர் இடமாற்றம்


UPDATED : செப் 05, 2015 12:00 AM

ADDED : செப் 05, 2015 11:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2015 12:00 AM ADDED : செப் 05, 2015 11:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்
: கடலுார் மாவட்டத்தில் நடந்த ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் 
68 ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டத்தில் 2015-2016ம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு கடலுாரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் கடந்த மாதம்18ம் தேதி 30ம் தேதி வரை நடந்தது.இதில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் 13பேருக்கும்நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் 17 பேருக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அளித்தும் ஆணை வழங்கப்பட்டது.

பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள் 21பேருக்கு மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் 22 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது. தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் 23 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது. தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் 21 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது.

இடை நிலை ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வில் 65பேருக்கு பணி நிரவல் செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள் 38 பேருக்கும்ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு11 பேருக்கும் ஆணை வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் பேருக்கு வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு 26 பேருக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் 260 பேர் பயனடைந்துள்ளனர்.

இதேப்போன்று மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கான மாறுதல் மாவட்டத்திற்குள்மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு என13 பேருக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் 14 பேருக்கும்;உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கான மாறுதல் கலந்தாய்வில் மாவட்டத்திற்குள்ளும்மாவட்டம் விட்டு மாவட்டம் என 10 பேருக்கும் ஆணை வழங்கப்பட்டது. உடற்கல்விகலைஇசை மற்றும் தையல் ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் 7 பேருக்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் என 2 பேருக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள்ளான கலந்தாய்வில் 32 பேருக்கும்மாவட்டம் விட்டு மாவட்டம் 13 பேருக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வில் 100 பேருக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் தொடக்கப்பள்ளிநடுநிலைப்பள்ளிஉயர்நிலைப்பள்ளி,மேல்நிலைப்பள்ளி என 68 பேருக்கு தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us