மேல்நிலைத் துணைத் தேர்வு விண்ணப்பிக்க சிறப்பு அனுமதி
மேல்நிலைத் துணைத் தேர்வு விண்ணப்பிக்க சிறப்பு அனுமதி
UPDATED : செப் 07, 2015 12:00 AM
ADDED : செப் 07, 2015 02:08 PM
அ நிறம் | அளவு
சென்னை
: மேல்நிலைத் துணைத் தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) முறையில் ஆன்லைனில் துணைத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
: மேல்நிலைத் துணைத் தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) முறையில் ஆன்லைனில் துணைத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்திற்க்கு நேரில் சென்று செப்.,9 மற்றும் செப்.,10 ஆசிய இரு தினங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களுக்கும் சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரத்தை www.tndge.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.