தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பத்தாம் வகுப்பு அறிவியல் செயல்முறை துணைத்தேர்வு

பத்தாம் வகுப்பு அறிவியல் செயல்முறை துணைத்தேர்வு

பத்தாம் வகுப்பு அறிவியல் செயல்முறை துணைத்தேர்வு


UPDATED : செப் 09, 2015 12:00 AM

ADDED : செப் 09, 2015 02:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 09, 2015 12:00 AM ADDED : செப் 09, 2015 02:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு அறிவியல் பாடத்திற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வானது அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களால் வரும் செப்.,21 முதல் செப்.,23 வரை நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அறிக்கையில்:

ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதி தோல்வியுற்ற தேர்வர்கள் தற்போது அறிவியல் பாட செய்முறைத் தேர்வை மீண்டும் எழுத வேண்டும். இத்தேர்வர்கள் கருத்தியல் தேர்வில் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்றிருப்பினும் செய்முறைத் தேர்வு எழுதிய பின்பு கட்டாயமாக மீண்டும் கருத்தியல் தேர்வெழுத வேண்டும்.

அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி பெற்று ஆனால் செய்முறைத்தேர்வெழுதாமல் விடுபட்ட தனித்தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் செய்முறைத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

நேரடித் தனித்தேர்வர்களை பொறுத்தவரை அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதிய பின்னரே, அறிவியல் பாட கருத்தியல் தேர்வு உட்பட ஏனைய பாடங்களில் தேர்வெழுத இயலும் என்பதால், இத்தேர்வர்கள் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வு பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்றிருப்பின் அவர்களும் மேற் குறிப்பிட்டுள்ள தேதிகளில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுதிய பின்னர் செப்டம்பர்/அக்டோபர் 2015ம் தேர்வெழுதலாம்.

எஸ்.எஸ்.எல்.சி மார்ச் 2016 தேர்விற்கு அறிவியல் பாட கருத்தியல் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள தனித்தேர்வர்கள் ஜூன் 2015ல் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பிற்குப் பெயர்களை பதிவு செய்திருப்பர். அத்தகைய தேர்வர்கள் செப்டம்பர்/அக்டோபர் 2015ம் செய்முறை தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேலும் செய்முறைத் தேர்வு நடத்தப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களைச் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us