UPDATED : செப் 12, 2015 12:00 AM
ADDED : செப் 12, 2015 10:41 AM
அ நிறம் | அளவு
மதுரை
: மதுரை மாநகராட்சி பள்ளிகளில்
பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் செப்.,16ல் நடக்கிறது.
மாநகராட்சி அலுவலகத்தில் அன்று காலை 10 மணிக்கு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 11 மணிக்கு பட்டதாரி ஆசிரியர்கள், மதியம் 12 மணிக்கு நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள், 3 மணிக்கு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள், 3.30 மணிக்கு இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்கலாம். காலிப்பணியிட விபரம் மற்றும் பணிமூப்பு பட்டியல், மாநகராட்சி அலுவலகத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
