UPDATED : செப் 12, 2015 12:00 AM
ADDED : செப் 12, 2015 10:58 AM
அண்ணா பல்கலை
கல்லுாரிகளில், முதற்கட்ட வளாக நேர்காணல் முடிந்துள்ளது. 120 பேருக்கு, குறைந்தபட்சம்
ஆண்டுக்கு, 15 லட்சம் முதல் 24 லட்சம் ரூபாய் ஊதியத்துக்கு, வேலை வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது.
கோட் நேஷன் என்ற, வெளிநாட்டு
தகவல் தொழில்நுட்ப பொருள் உற்பத்தி நிறுவனம், 24 லட்சம் ரூபாய் ஊதியத்தை
நிர்ணயித்துள்ளது. மொத்தம், 360 நிறுவனங்களுக்கு,
அண்ணா பல்கலையிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டது.
இதில், மைக்ரோசாப்ட், கோட் நேஷன், சாம்சங், அமேசான், ப்ளிப்கார்ட், ஈபே, அடோப் உள்ளிட்ட, 100க்கும்
மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த தேர்வு குறித்து, அண்ணா பல்கலை
துணைவேந்தர் ராஜாராம் கூறுகையில்,
நேர்காணலுக்கு முன் மாணவர்களுக்கு, தக்க பயிற்சி
வழங்கப்பட்டது, என்றார்.
இந்த ஆண்டு
புதிதாக, இரட்டை வேலைவாய்ப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஐ.டி.,யில் பொருள் உற்பத்தி
நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்றாலும், கோர் நிறுவன பணி கிடைத்தால், அதிலும்
வாய்ப்பு பெற முடியும்.மேலும், உள்வளாக பயிற்சி எனப்படும், இன்டர்ன்ஷிப் பயிற்சி
முறையில், இந்த ஆண்டு, 70 மாணவர்கள், 10 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை, மாத உதவி தொகையில், தனியார்
நிறுவனங்களில் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இணைப்பு
கல்லுாரிகள்: அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளிலும், டிச., 3ம் தேதி வளாக
நேர்காணல் நடக்க உள்ளது. இந்த ஆண்டு, 5,000 பேர் வரை, அதிக ஊதியத்தில்
வாய்ப்பு பெறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
