தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தோட்டக்கலை மாணவிகளின் கிராம பணி திட்டம்

தோட்டக்கலை மாணவிகளின் கிராம பணி திட்டம்

தோட்டக்கலை மாணவிகளின் கிராம பணி திட்டம்


UPDATED : செப் 15, 2015 12:00 AM

ADDED : செப் 15, 2015 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2015 12:00 AM ADDED : செப் 15, 2015 10:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டிபட்டி
: பெரியகுளம் தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் மாணவிகள் கிராம பணி அனுபவத்திட்டத்தில் ஆண்டிபட்டி பகுதி விவசாயிகளை அணுகி விவசாயத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தனர். 

நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் ஜோமி அபிகெய்ஸ், ஜீவிதா, கல்பனா, கவிப் பிரியா, கீர்த்தனா ஆகியோர் அருப்புக் கோட்டை நாயக்கன்பட்டி விவசாயி சீனிவாசன் என்பவர் தோட்டத்தில் மண் மாதிரி எடுக்கும் முறைகள், நிலத்தில் எந்த இடத்தில் எடுக்க வேண்டும் என்பது குறித்து செயல் முறை விளக்கம் அளித்தனர். ஸ்ரீரங்காபுரம் விவசாயி சில்லிங்கன் தோட்டத்தில் காலிபிளவர் அறுவடைக்குப்பின் சந்தைக்கு அனுப்பும் முறை குறித்து விளக்கினர். மூணாண்டிபட்டி விவசாயி தங்கம், சேடபட்டி விவசாயி தங்கவேல் ஆகியோர் தோட்டத்தில் குழிதட்டு பற்றியும், அதில் விதைகள் நடும் முறை, இடமாற்றம் செய்யும் முறை பற்றி செயல் விளக்கம் கொடுத்தனர். 

குழி தட்டின் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. பஞ்சகவ்யம் தயாரிப்பு முறை, அதில் உள்ள படி நிலைகள் குறித்து, தர்மத்துப்பட்டி விவசாயி கிருஷ்ணமூர்த்தி தோட்டத்தில் மாணவிகள் செயல்முறை விளக்கம் கொடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us