தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஸ்பையர் விருது மாணவியர் பங்கேற்பு

இன்ஸ்பையர் விருது மாணவியர் பங்கேற்பு

இன்ஸ்பையர் விருது மாணவியர் பங்கேற்பு


UPDATED : செப் 15, 2015 12:00 AM

ADDED : செப் 15, 2015 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2015 12:00 AM ADDED : செப் 15, 2015 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்
: டில்லியில் வரும், 26, 27ம் தேதிகளில் நடக்கும் தேசிய அளவிலான இன்ஸ்பையர் விருதுக்கான போட்டியில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு மாணவியர், பங்கேற்கின்றனர்.

பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தவும், இளம் விஞ்ஞானிகளை உருவாக்கவும், மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை, இன்ஸ்பையர் விருது வழங்குகிறது. இதற்காக, மேல்நிலைப்பள்ளிகளில், ஒரு பள்ளிக்கு ஐந்து மாணவர்கள் கொண்ட குழுவும்; நடுநிலைப்பள்ளிகளில், மூன்று பேர் கொண்ட குழுவும் உருவாக்கப்படுகிறது; மாணவருக்கு, 5,000 ரூபாய் வீதம், அறிவியல் புத்தாக்க விருது (இன்ஸ்பையர் அவார்டு) ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்ட அளவில் தேர்வான, 39 படைப்புகள், நாமக்கல்லில் மாநில அளவில் நடந்த போட்டியில் இடம் பெற்றன; அதில், திருப்பூர் மாவட்டத்துக்கு, ஆறு பரிசுகள் கிடைத்தன; பொங்கலூர் பி.வி.கே.என்., பள்ளி கிருத்திகாஉடுமலை சீனிவாசா வித்யாலயா பள்ளி அஸ்வந்திகா ஆகியோரின் அறிவியல் படைப்புகள், சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்டு, தங்கம் வென்றது. 

மாணவியர் இருவரும், டெல்லியில் வரும், 26 மற்றும், 27ம் தேதிகளில் நடைபெறவுள்ள, தேசிய இன்ஸ்பையர் விருதுக்கான போட்டியில் பங்கேற்க உள்ளனர். தமிழகம் முழுவதும் இருந்து, இவ்வாறு, 42 படைப்புகள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளதாக, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us