தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மேல்நிலை துணைத் தேர்வு செப்.,18 முதல் அனுமதிச்சீட்டு பதிவிறக்கம்

மேல்நிலை துணைத் தேர்வு செப்.,18 முதல் அனுமதிச்சீட்டு பதிவிறக்கம்

மேல்நிலை துணைத் தேர்வு செப்.,18 முதல் அனுமதிச்சீட்டு பதிவிறக்கம்


UPDATED : செப் 15, 2015 12:00 AM

ADDED : செப் 15, 2015 05:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2015 12:00 AM ADDED : செப் 15, 2015 05:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செப்டம்பர்-அக்டோபர் 2015கான மேல்நிலை துணைத் தேர்வினை எழுதவுள்ள தனித்தேர்வர்களின் தேர்வு அனுமதிச்சீட்டுகளை வருகிற செப்.,18 முதல் www.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும், தமிழ்நாடு அரசு தேர்வுகள் வெளியிட்ட அறிக்கையில்;

எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்வதோடு, எழுத்துத் தேர்விற்கும் வருகை புரிய வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்விற்கு வருகை தரவேண்டும்.

முதன்முறையாக மேல்நிலைத் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள நேரடித் தனித்தேர்வர்கள்  மொழிப்பாடத்தின் தாள் இரண்டு மற்றும் சிறப்பு மொழி (தமிழ்) எழுதும் தேர்வர்கள்  கேட்டல்/பேசுதல் திறன் தேர்வுகளைக் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

மொழிப்பாடங்களில் கேட்டல்/பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்)பாடத்தில் கேட்டல்/பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us