பட்டதாரி ஆசிரியர் கவுன்சிலிங் விரைவில் நடத்த வலியுறுத்தல்
பட்டதாரி ஆசிரியர் கவுன்சிலிங் விரைவில் நடத்த வலியுறுத்தல்
UPDATED : செப் 16, 2015 12:00 AM
ADDED : செப் 16, 2015 10:18 AM
திண்டுக்கல்
: உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்
கவுன்சிலிங்கை விரைவில் நடத்த தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
வலியுறுத்தியுள்ளது.
அதன் மாவட்ட
நிர்வாக குழுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாவட்டத் தலைவர் பாபு தலைமை
வகித்தார். இணைச் செயலாளர் ராஜ்மோகன், துணைத்தலைவர்
பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜோசப்சேவியர் வரவேற்றார்.
மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட், தணிக்கை குழு
உறுப்பினர் பாண்டியராஜன், துணைத்தலைவர் திருநாவுக்கரசு பேசினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்க பயிற்சிக்கான ஈடுசெய்யும் விடுப்பு வழங்கப்படாமல் உள்ளது. அவற்றை வழங்க முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும். வேலை நிறுத்தத்திற்கான ஆயத்த கூட்டத்தை நடத்துவது, தொடக்க கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் சுப்ரமணி நன்றி கூறினார்.
