தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பணிக்கு தேர்வு 91 பேர் பங்கேற்பு

ஆசிரியர் பணிக்கு தேர்வு 91 பேர் பங்கேற்பு

ஆசிரியர் பணிக்கு தேர்வு 91 பேர் பங்கேற்பு


UPDATED : செப் 19, 2015 12:00 AM

ADDED : செப் 19, 2015 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2015 12:00 AM ADDED : செப் 19, 2015 10:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: கோவை மத்திய சிறையில் நேற்று நடந்த ஆசிரிய பணியிட தேர்வில், 91 பேர் பங்கேற்றனர். கோவை மத்திய சிறையில் நான்கு இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

காலி பணியிடத்தை பூர்த்தி செய்யும் வகையில், ஆசிரியர் பட்டயப்படிப்புடன் இரண்டு ஆண்டு முன் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. நேற்று காலை, 11.௦௦ மணிக்கு, காலி பணியிடத்துக்கு விண்ணப்பித்த, 91 பேர் பங்கேற்றனர். சிறை கண்காணிப்பாளர் பழனி முன்னிலையில், சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு நான்கு பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மத்திய சிறை அதிகாரிகள் கூறுகையில், நான்கு பணியிடங்களுக்கு, ௯௧ பேர் பங்கேற்றுள்ளனர். எழுத்து தேர்வு, பொதுப்போட்டி என, பல கட்டங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு, இறுதியில் நான்கு இடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளனஎன்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us