தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளை மூடி போராட்டம்; பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு

பள்ளிகளை மூடி போராட்டம்; பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு

பள்ளிகளை மூடி போராட்டம்; பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு


UPDATED : செப் 21, 2015 12:00 AM

ADDED : செப் 21, 2015 11:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2015 12:00 AM ADDED : செப் 21, 2015 11:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை
:
பங்களிப்பு பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபர், 8ல், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை மூடி போராட்டம் நடத்தப்படும், என, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் ஏ.மாயவன் தெரிவித்தார்.

சிவகங்கையில், அவர் கூறியதாவது: முதல்வர் ஜெ., சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், ஆட்சிக்கு வந்தவுடன் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வேன் என்றார்; இன்று வரை ரத்தாகவில்லை.மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் நியமித்த ஆசிரியரை பணிவரன் முறை செய்ய வேண்டும் என்பன உட்பட, 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அக்டோபர், 8ம் தேதி தமிழகம் முழுவதும், 3 லட்சம் ஆசிரியர்கள், பள்ளிகளை மூடி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இதற்கு பின்னரும் அரசு செவி சாய்க்காவிடில், தொடர் போராட்டம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us