தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காந்திகிராம பல்கலையில் புதிய பட்டப் படிப்புகள்

காந்திகிராம பல்கலையில் புதிய பட்டப் படிப்புகள்

காந்திகிராம பல்கலையில் புதிய பட்டப் படிப்புகள்


UPDATED : செப் 23, 2015 12:00 AM

ADDED : செப் 23, 2015 03:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2015 12:00 AM ADDED : செப் 23, 2015 03:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காந்திகிராமம்
: காந்திகிராம பல்கலையில் வேலைவாய்ப்புதரும்
2 புதிய தொழிற்சார் பட்டப்படிப்புகள் துவங்கப்பட்டன.

பல்கலை துணைவேந்தர் நடராஜன் கூறியதாவது: காந்திகிராம பல்கலையில் புதிதாக அறிவுசார் தொழில் மேம்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மையம் மூலம் 2015-16 க்கு புதிதாக இளநிலை தொழிற் பட்டப்படிப்புகள் துவங்கப்பட்டு உள்ளன. இதில் பண்ணை இயந்திரங்கள் இயக்குதல் மற்றும் பராமரித்தல், காலணிகள் மற்றும் துணைப்பொருட்கள் வடிவமைப்பு ஆகிய 2 பட்டப்படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகள் பல்கலை மானியக்குழு நிதியுதவியில் துவங்கப்பட்டன. எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்த படிப்பில் 6 மாதம், ஓராண்டு, 2 ஆண்டு, மூன்றாண்டு என, மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப படிக்கலாம். இதில் 60 சதவீதம் செயல்திறன் பயிற்சி, 40 சதவீதம் விளக்க பாடங்கள் இருக்கும். இதில் சேர பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும். www.ruraluniv.ac.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us