தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/49 காலியிடத்துக்கு 1௦,000 பேர் போட்டி; கோர்ட்டில் அக்., 2ல் நேர்காணல்

49 காலியிடத்துக்கு 1௦,000 பேர் போட்டி; கோர்ட்டில் அக்., 2ல் நேர்காணல்

49 காலியிடத்துக்கு 1௦,000 பேர் போட்டி; கோர்ட்டில் அக்., 2ல் நேர்காணல்


UPDATED : செப் 25, 2015 12:00 AM

ADDED : செப் 25, 2015 10:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 25, 2015 12:00 AM ADDED : செப் 25, 2015 10:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: கோவை கோர்ட்களில் காலியாகவுள்ள
, 49 அலுவலக பணியாளர்கள் காலியிடத்திற்கு, 1௦ ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான நேர் காணல் அக்., 2ம் தேதி நடக்கிறது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 4௦க்கும் மேற்பட்ட கோர்ட்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 642 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நீதிமன்றங்களில், அடிப்படை பணி விதிகளின் கீழ் வரக்கூடிய, அலுவலக உதவியாளர், இரவு காவலர், துப்புரவு பணியாளர், காவலர் போன்ற பணிகளுக்கு, 49 காலியிடங்கள் உள்ளன. இப்பணிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு, ஜூன்., 13ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இதையடுத்து, 1௦ ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல், அக்., 2 காலை 8:00 மணியில் இருந்து நடைபெறுகிறது. இதற்கான அழைப்புகடிதம் நேற்று முதல் அனுப்பி வைக்கப்படுகிறது. மாவட்ட நீதிபதி பொங்கியப்பன் தலைமையில், அனைத்து நீதிபதிகள் மற்றும் கோர்ட் ஊழியர்கள் நேர்காணல் நடத்துகின்றனர். நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, மறுநாள் பணி நியமன உத்தரவு வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us