UPDATED : செப் 25, 2015 12:00 AM
ADDED : செப் 25, 2015 10:27 AM
கூடலுார்
: கூடலுார் அருகே நெல்லிக்கரை பழங்குடியினர் காலனியில் பள்ளி செல்லா மாணவர்களிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கூடலுார் அருகே நெல்லிக்கரை பழங்குடியினர் காலனி அமைந்துள்ளது. இப்பகுதியிலிருந்து, 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொரப்பள்ளி அரசு பழங்குடியினர் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதையடுத்து, கிராமத்துக்கு பள்ளி தலைமையாசிரியை கலாவதி மற்றும் ஆசிரியர்கள் நேரடியாக சென்று; பழங்குடியின மாணவர்கள் கல்வி கற்பதன் அவசியம் மற்றும் வேலைவாய்ப்புகள் அவற்றின் மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்து விளக்கமளித்தனர்.
தொடர்ந்து, மாணவர்களை பள்ளிக்கு அனுப்பவும், மாணவர்களுக்கு உடல்நலன் மற்றும் வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அது குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக தீர்வு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளிக்கு வராமல் இருந்த ஐந்து மாணவர்களை பள்ளிக்கு ஆசிரியர்கள் அழைத்து வந்தனர்.
