UPDATED : செப் 26, 2015 12:00 AM
ADDED : செப் 26, 2015 10:33 AM
337 இடங்களுக்கு, 11 ஆயிரத்து, 500 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான இரண்டு கட்ட கலந்தாய்வுகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், கல்லுாரிகளில் சேர்ந்து, வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், மூன்றாம் கட்ட கலந்தாய்வு, இன்றும், நாளையும், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடக்கிறது. இடங்கள் விவரம்: அரசு மருத்துவக் கல்லுாரிகள் - ஐந்து; இ.எஸ்.ஐ., கல்லுாரி - 69; சுய நிதி கல்லுாரிகள் - 40 என, 114 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. பி.டி.எஸ்., படிப்பில், அரசு கல்லுாரி - 10; சுயநிதி கல்லுாரிகள் - 213 என, 223 இடங்கள் உள்ளன. இரண்டு படிப்புகளுக்கும், மொத்தம், 337 இடங்கள் உள்ளன; இதற்கு, 11 ஆயிரத்து, 500 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர்.
