UPDATED : செப் 26, 2015 12:00 AM
ADDED : செப் 26, 2015 10:52 AM
புதுச்சேரி
: தவளக்குப்பம்
ராஜிவ்காந்தி கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில் மென்திறன் மற்றும் தொடர்பாடல்
திறன் பயிற்சி முகாம் நடந்தது.
கல்லுாரி
முதல்வர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆறு நாட்கள் நடைபெற்ற பயிற்சி
வகுப்பில் பி.காம், பி.பி.ஏ., பி.எஸ்சி. (கம்ப்யூட்டர் சயின்ஸ்), பி.சி.ஏ., மாணவர்களுக்கு பயிற்சி
அளிக்கப்பட்டது.தன்னை கண்டறிதல், ஆளுமைத்திறன் வளர்த்தல், தொடர்பாடல் திறன் மேம்படுத்துதல் ஆகிய பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவையில் உள்ள ட்ரீம் மேட்டிசர்ஸ் நிறுவனத்தின் வினோத், மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.புதுச்சேரி அரசு உயர்கல்வி துறையின் நிதியுதவியுடன் நடந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காயத்ரி தேவி செய்திருந்தார்.
