தாய்மொழி கல்வி குறித்த தீர்ப்பு மாநில மொழிகளுக்கு பின்னடைவு
தாய்மொழி கல்வி குறித்த தீர்ப்பு மாநில மொழிகளுக்கு பின்னடைவு
UPDATED : செப் 28, 2015 12:00 AM
ADDED : செப் 28, 2015 10:26 AM
பெங்களூரு
: தாய்மொழியில் கல்வி அளிப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, கன்னடம் உட்பட அனைத்து மாநில மொழிகளுக்கும் பின்னடைவை
ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மொழிகளை காப்பாற்ற, அனைவரும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த வேண்டும், என, கன்னட எழுத்தாளர் ஜாவரே கவுடாதெரிவித்தார். கன்னட இலக்கிய கவுன்சில் சார்பில் பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஜாவரே கவுடா பங்கேற்று பேசியதாவது: தாய் மொழியில் கல்வி அளிக்கும் விஷயத்தில், சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது. முதல்வர் சித்தராமையா தென் மாநிலங்களின் முதல்வர்களுடன் விவாதித்து, பிரதமர் மோடியிடம் விவரித்து, சட்ட திருத்தம் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.
கன்னட மொழி,
மண்ணுக்கு பிரச்னை ஏற்படும்போது, போராட்டம் நடத்த வேண்டிய கன்னட இலக்கிய கவுன்சில், தாய்மொழி கல்வி விஷயத்தில் மவுனமாக இருப்பது சரியல்ல.
தாய்மொழியில் கல்வி கற்பிக்கும் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பற்றி மாநில எழுத்தாளர்கள் மவுனமாக இருப்பது அதிருப்தியளிக்கிறது.அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தினால், கன்னடம் உட்பட மற்ற மாநில மொழிகள் காப்பாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
