தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பாலிடெக்னிக் இன்டர்நெட் மயம்

அரசு பாலிடெக்னிக் இன்டர்நெட் மயம்

அரசு பாலிடெக்னிக் இன்டர்நெட் மயம்


UPDATED : செப் 28, 2015 12:00 AM

ADDED : செப் 28, 2015 10:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2015 12:00 AM ADDED : செப் 28, 2015 10:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவியரின் தேவைக்காக
, 16 லட்சம் ரூபாய் மதிப்பில், 300 இன்டர்நெட் கேபிள் இணைக்கும் பணி துவங்கியுள்ளது. 

மாநிலம் முழுவதும், 41 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. அதன் ஒருபகுதியாக, கல்லுாரிகளில், இன்டர்நெட் மூலம் இலவச கல்வி

பெறவும், பாட ரீதியான தகவல் பெறவும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தில், 16 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டு வருகிறது. அவிநாசி ரோடு அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சில மாதங்களுக்கு முன், இந்த நிதியில், 400 இன்டர்நெட் கேபிள்கள் பொருத்தப்பட்டு மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். தொடர்ந்து, அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில், 400 இன்டர்நெட் கேபிள்கள் இணைக்கும் பணி நடந்து வருகிறது.

வகுப்பறைகள், தங்கும் விடுதி, குடியிருப்பு பகுதி உட்பட கல்லுாரியின் பல்வேறு இடங்களில் இந்த இணைப்புகள் பொருத்தப்படுகின்றன. இதனால், சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட ஆறு பாடப்பிரிவுகளில், ௧,௨௦௦ மாணவியர் பயன்பெறுவர். கல்லுாரி முதல்வர் கவுசியா ஜெபீன் கூறுகையில், மத்திய அரசின், 16 லட்சம் ரூபாய் நிதியில், இன்டர்நெட் கேபிள்கள் இணைக்கும் பணி சில நாட்களுக்கு முன் துவங்கியது; இன்னும் ஒரு வாரத்தில் முடிந்துவிடும். லேப் டாப் வாயிலாக மாணவியர் இந்த சேவையை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால், மாணவர்களின் கல்வித் தரம் மேம்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us