தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆதார் இல்லாத மாணவர்களுக்கு லேப் டாப் வழங்க உத்தரவு

ஆதார் இல்லாத மாணவர்களுக்கு லேப் டாப் வழங்க உத்தரவு

ஆதார் இல்லாத மாணவர்களுக்கு லேப் டாப் வழங்க உத்தரவு


UPDATED : செப் 30, 2015 12:00 AM

ADDED : செப் 30, 2015 10:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 30, 2015 12:00 AM ADDED : செப் 30, 2015 10:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்
: தினமலர் செய்தி எதிரொலியாக, ஆதார் அட்டை இல்லாத மாணவர் களுக்கு லேப் டாப் வழங்க கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 67 அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் 700 க்கும் மேலான மாணவர்கள் பிளஸ் 2 படித்தனர். இவர்களுக்கு அரசு சார்பில் விலையில்லா லேப் டாப் கடந்த சில நாட்களாக வழங்குகிறது. ஆதார் அட்டை இல்லாத மாணவர்களுக்கு லேப் டாப் வழங்க கூடாது என மாவட்ட கலெக்டர், பள்ளி கல்விதுறை இயக்குநர் உத்தரவிட்டனர். 

இதனால் மாவட்டத்தில் 200க்கு மேலான மாணவ, மாணவிகள் லேப் டாப் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். சில பள்ளியில் ஆதார் அட்டைக்கு முகாம் நடக்காததால் மாணவர்கள் ஆதார் அட்டை எடுக்க முடியாமல் போனது. ஆதார் அட்டையை காரணம் காட்டி அரசு சலுகைக்கு தடை விதிக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் உயர் அதிகாரிகள் பொருட்படுத்தாமல் மாணவர்களுக்கு லேப் டாப் நிறுத்தியதாக 27.9.15 அன்று தினமலரில் செய்தி வெளியானது. 

இதுகுறித்து கல்விதுறை இயக்குநர் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து ஆதார் அட்டை இல்லாத மாணவர்களிடம் எழுதி வாங்கி கொண்டு லேப் டாப் வழங்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதனால் விடுபட்ட மாணவர்களுக்கு இன்று (செப். 30) முதல் லேப் டாப் வழங்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us