தனியார் நிறுவனங்களில் சேர சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்
தனியார் நிறுவனங்களில் சேர சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்
UPDATED : அக் 01, 2015 12:00 AM
ADDED : அக் 01, 2015 10:20 AM
புதுச்சேரி
:
தனியார் நிறுவனம் மூலம் வேலை வாய்ப்பிற்கு தொழிலாளர் துறை சார்பில் 3 மற்றும் 4ம் தேதிகளில் சிறப்பு வேலை வாய்ப்பு
முகாம் நடக்கிறது.
வேலைவாய்ப்பு
மற்றும் பயிற்சி இயக்குனர் யாசம் லட்சுமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
புதுச்சேரி
தொழிலாளர் துறை வேலை வாய்ப்பகம் சார்பில் நவயுக கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம்
மூலம் 500 பணியிடங் களை நிரப்ப சிறப்பு
வேலைவாய்ப்பு முகாம் வரும் 3, 4ம் தேதிகளில் வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் நடக்கிறது.
வரும் 3ம் தேதி நடக்கும் முகாமில், டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தில் 50 பதவிகளுக்கு இளநிலை பட்டம், ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 6 மாதம் வாய்ஸ் பிராசஸ் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சதர்லேண்ட் குளோபல் நிறுவனத்தில் 150 பதவிகளுக்கு ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். வரும் 4ம் தேதி முகாமில், செர்க்கோ குளோபல் சர்வீஸ் என்ற நிறுவனத்தில் 300 பதவிகளுக்கு பிளஸ் 2, டிப்பளமோ, ஐ.டி.ஐ., இளநிலை பட்டம் ஏதேனும் ஒன்று பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.
மேற் கூறிய கல்வி தகுதியுடைய 18 வயதிலிருந்து 30 வயது நிரம்பியவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதில் கலந்து கொள்பவர்கள் கல்வி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் காலை 9.30 மணிக்கு பங்கேற்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகம், வழுதாவூர் சாலை, காந்தி நகர், புதுச்சேரி என்ற முகவரியிலும் ௦413 -2274672 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
