தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/4, 5ல் இறுதிக்கட்ட மருத்துவ கவுன்சிலிங்

4, 5ல் இறுதிக்கட்ட மருத்துவ கவுன்சிலிங்

4, 5ல் இறுதிக்கட்ட மருத்துவ கவுன்சிலிங்


UPDATED : அக் 03, 2015 12:00 AM

ADDED : அக் 04, 2015 09:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2015 12:00 AM ADDED : அக் 04, 2015 09:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் உள்ள, 21 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 2,655 இடங்கள் உள்ளன. இதில், மாநில ஒதுக்கீட்டுக்கான, 2,257 இடங்கள், நிரம்பி விட்டன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்ற, 398 இடங்களில், நிரம்பாத, 75 இடங்கள், செப்., 30ம் தேதி, தமிழகத்துக்கே திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

அன்று தான், மாணவர் சேர்க்கைக்கு இறுதி நாள் என்பதால், மீதியுள்ள இடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையைக் கூறி, சேர்க்கைக்கான அவகாசம் கேட்டு, தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அக்., 7ம் தேதி வரை மாணவர்கள் சேர்க்கை நடத்த, அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, இறுதிக் கட்ட கவுன்சிலிங், நாளையும், நாளை மறுநாளும், சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரியில் நடக்கும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, மாணவர் சேர்க்கை செயலர் உஷா சதாசிவம் கூறியதாவது: 

இறுதிக் கட்ட கவுன்சிலிங்கில், அரசுக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - 67; பி.டி.எஸ்., - எட்டு; சுய நிதி கல்லுாரிகளில், பி.டி.எஸ்., - 143 என, 218 இடங்கள் நிரப்பப்படும். மாணவர் சேர்க்கைக்கு, சுயநிதி கல்லுாரிகள், நீதிமன்ற அனுமதி பெற்றால், அந்த இடங்களும் சேர்த்துக் கொள்ளப்படும். மேலும், விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us