தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/படிப்பை நிறுத்தி 23 ஆண்டிற்கு பின் பட்டதாரியான பெண்

படிப்பை நிறுத்தி 23 ஆண்டிற்கு பின் பட்டதாரியான பெண்

படிப்பை நிறுத்தி 23 ஆண்டிற்கு பின் பட்டதாரியான பெண்


UPDATED : அக் 06, 2015 12:00 AM

ADDED : அக் 06, 2015 10:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2015 12:00 AM ADDED : அக் 06, 2015 10:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராம்பூர்
: உத்தரகண்ட் மாநிலத்தில்
, படிப்பை நிறுத்தி, ௨௩ ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் படித்து, ஒரு கிராமத்து பெண் பட்டதாரியாகி, சாதனை படைத்துள்ளார்.

உத்தரகண்டில், முதல்வர் ஹரீஸ் ராவத் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கே, பாக்வலி போக்ஹர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமா பஜீதா, 43. இவருக்கு 23 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அப்போது அவர், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தார்; அத்துடன் படிப்பை நிறுத்திவிட்டு, திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்பும், பஜீதாவுக்கு படிக்கும் ஆசை குறைய வில்லை. ஆனால், வீட்டில் கணவர், மாமனார், மாமியாரை கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது மேலும், இரண்டு குழந்தை கள் பிறந்ததையடுத்து, பஜீதாவின் தொடர்ந்து படிக்கும் ஆசை நிறைவேற முடியாமல் போனது.

திருமணமாகி, 20 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும், குழந்தைகள் ஓரளவுக்கு பெரியவர்கள் ஆகிவிட்ட நிலையிலும், பஜீதாவிடம், மீண்டும் படிக்கும் ஆசை துளிர்விட்டது. இதையடுத்து அவர், ௨௦௧௨ல், ரோகில்கண்ட் பல்கலைக் கழகத் தில் பட்டப்படிப்பில் சேர்ந்தார். சிறப்பாக படித்து, இப்போதுபட்டதாரியாகி இருக்கிறார். 

இது பற்றி பஜீதா கூறியதாவது:

படிக்க வேண்டும் என்ற ஆசை, எனக்கு எப்போதும் இருந்தது. என் ஆசையை புரிந்துகொண்ட, என் கணவர், மாமியார், மாமனார், உற்சாகப்படுத்தி, முழுமையாக ஒத்துழைப்பு அளித்தனர். அடுத்து, முதுகலை பட்டம் பெறவும் முடிவு செய்துள்ளேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us