தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாட்டுக்கறி உண்ணும் போராட்டம்; மாணவர்கள் சஸ்பெண்ட்

மாட்டுக்கறி உண்ணும் போராட்டம்; மாணவர்கள் சஸ்பெண்ட்

மாட்டுக்கறி உண்ணும் போராட்டம்; மாணவர்கள் சஸ்பெண்ட்


UPDATED : அக் 06, 2015 12:00 AM

ADDED : அக் 06, 2015 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2015 12:00 AM ADDED : அக் 06, 2015 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சூர்
: உ.பி.
,யில் மாட்டுக்கறி சாப்பிட்டதாக வதந்தி பரவியதால், ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள மாநிலம் திருச்சூரில், கல்லுாரி வளாகத்தில், மாட்டுக்கறி சாப்பிடும் நிகழ்ச்சி நடத்திய ஆறு மாணவர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

உ.பி.,யில் தாத்ரி நகரில், கடந்த வாரம், மாட்டுக்கறி சாப்பிட்டதாக வதந்தி பரவியதால், ஆத்திரமடைந்த கும்பல், முகமது இக்லக், 50, என்பவரை அடித்துக் கொன்றது. இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கேரள மாநிலம், திருச்சூரில், ஸ்ரீகேரள வர்மா கல்லுாரியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான, எஸ்.எப்.ஐ., எனப்படும் இந்திய மாணவர் சங்கத்தினர், மாட்டுக்கறி சாப்பிடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி, சக மாணவர்களுக்கு மாட்டுக்கறி, ரொட்டிகளை வழங்கினர்.

இதற்கு, பா.ஜ.,வின் மாணவர் அமைப்பான, ஏ.பி.வி.பி., எனப்படும் அகில இந்திய வித்யா பரிஷத்தைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கல்லுாரியில், இரு தரப்பினரும் மோதிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கல்லுாரி வளாகத்தில் மாட்டுக்கறி சாப்பிட்ட ஆறு மாணவர்களை, கல்லுாரி நிர்வாகம், சஸ்பெண்ட் செய்துள்ளது. 

இதுகுறித்து, கல்லுாரி முதல்வர் லதா கூறுகையில், கல்லுாரி வளாகத்தில், அசைவ உணவு சாப்பிட அனுமதி இல்லை. போராட்டம் நடத்திய மாணவர்களை, கல்லுாரி வளாகத்தில் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என எச்சரித்தோம். அதை மீறி சாப்பிட்ட மாணவர்கள் மீது, சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us